அரசியல் காழ்புணர்ச்சிகாக மத்திய அரசை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள்! அண்ணாமலை சாடல்!

0
127

தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இருக்கின்ற அணைகளை பாதுகாக்க மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டம் தொடர்பான புரிதல் இல்லாமல் அரசியல், செய்வதற்காக திமுக மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றன என கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசு அலட்சியம் செய்ததால் 34 வருட காலமாக அணை பாதுகாப்பு மசோதா கிடப்பில் போடப்பட்டது, நாட்டில் இருக்கின்ற அனைத்து ஆண்களுக்கும், ஒரே வகையிலான பாதுகாப்பு வழிமுறைகளை முன்னெடுப்பதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கம். அணை பாதுகாப்பு மசோதா மூலமாக ஒவ்வொரு மாநிலத்திலும் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில அணை பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவது கட்டாயமாக்கப்படும். அணை பாதுகாப்பு மசோதா நாட்டில் இருக்கின்ற அணைகளின் பாதுகாப்பை உறுதிப் படுத்துகிறது, அணை பராமரிப்பில் மாநிலங்களின் பங்களிப்பு மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கிறது என தெரிவித்திருக்கிறார். அதேபோல அரசியலாக்கப்படும் மத்திய அரசின் மசோதாக்களில் நன்மைகளைப் பற்றியும், மத்திய அரசின் திட்டங்களை பற்றியும், தொடர்ந்து பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம்முடைய கடமை என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரை காவல்துறையினர் அடித்து கொலை செய்ததாக அவருடைய உறவினர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதன் காரணமாக, முழுமையான விசாரணை நடைபெறவேண்டும் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Previous articleஒமைக்ரான் வைரஸ்! புதிய தகவலை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!
Next articleதமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை! அதிரடி வேட்டையில் இறங்கிய சைலேந்திர பாபு!