வந்துவிட்டது! வலியே தெரியாமல் தற்கொலை செய்ய புதிய இயந்திரம்! இதை வாங்க துடிக்கும் மக்களின் ஆர்வம்!
தற்போதுள்ள காலகட்டத்தில் உலகமே இயந்திரமயமாகி விட்டது. ஏனெனில் யாருக்கும் யாரைப் பற்றிய கவலையும் இல்லை. மேலும் தங்களை பற்றிய அக்கறையே இல்லாமல் தான் பலரும் வாழ்ந்து வருகின்றனர் என்பதுதான் இதில் ஆச்சரியப்பட வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது. மேலும் தற்போது உள்ள வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் மூலம் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்ய பல தேவையான எந்திரங்களை வடிவமைப்பதில் சிலர் பல விதங்களில் தேர்ச்சி அடைந்துள்ளதும் ஆச்சரியமாகதான் உள்ளது.
தற்போது மனிதன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள கூட ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார் என்பது அனைவருக்கும் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதை சுவிட்சர்லாந்து அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. அங்கு தான் இந்த வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் நவீன எந்திரமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் கூடுதல் தகவல் என்னவென்று தெரிந்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள். அந்த இயந்திரத்தை பயன்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றாலும், தற்கொலை செய்து கொள்வதை கூட மிகவும் எளிமையாக தயாரித்து உள்ளனர் என்பது தான் அந்த ஆச்சரியம். சுவிட்சர்லாந்தில் கருணைக் கொலை என்பது சட்டபூர்வமான தாக்கப்பட்டுள்ளது.
அங்கு கடந்த வருடம் மட்டும் 1,300 பேர் கருணை கொலை மூலம் கொலை செய்யப்பட்டனர். சில சேவை அமைப்புகள் மூலம் தற்கொலை செய்து கொண்டதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்தான் டாக்டர் டெத் என்று அழைக்கப்படும் கருணை கொலை ஆர்வலர், மற்றும் மருத்துவருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்யும் ஒரு புது வடிவ எந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
சார்கோ கேப்ஸ்யூல் என்று இது அழைக்கப்படுகின்றது. சவப்பெட்டி போன்ற ஒரு தோற்றத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். தற்கொலை செய்ய விரும்பும் நபர்கள் இந்த எந்திரத்தின் உள்ளே சென்று படுத்துக் கொள்ள வேண்டுமாம். அதன் பிறகு அதில் உள்ள ஒரு பட்டனை அழுத்தும் போது நமது உயிர் நம்மை விட்டு வலியே இல்லாமல் பிரிந்து விடும். ஆம் இந்த இயந்திரத்தில் அப்படி ஒரு சிறப்பு அம்சம் கொண்டது என்றும், அடுத்த ஆண்டு முதல் இது விநியோகத்திற்கும், செயல்முறைக்கும் வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.