உங்களது தவறான செயல்களுக்கு தக்க விலையை எதிர்பாருங்கள்! எச்சரிக்கை விடுத்த சீனா!

0
137
Expect a fair price for your misdeeds! China warns!
Expect a fair price for your misdeeds! China warns!

உங்களது தவறான செயல்களுக்கு தக்க விலையை எதிர்பாருங்கள்! எச்சரிக்கை விடுத்த சீனா!

சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் சீனாவில் இன சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் பல வகைகளிலும் நடைபெற்று வருகின்றது. எனவே இந்த மனித உரிமை மீறல்களை கண்டித்து பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்தன.

அதன் காரணமாக அந்த ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாக முதலில் அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி இவ்வாறு கூறியுள்ளார். அங்கு நடக்கும் இனப்படுகொலை மற்றும் மனித நேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில், அடுத்த ஆண்டு நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் ஒலிம்பிக் தொடரில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்பார்கள். ஆனால் ஒலிம்பிக் சார்ந்த நிகழ்ச்சிகளில், எந்த அதிகாரியும் பங்கேற்க அனுமதிக்க மாட்டார்கள் என அமெரிக்காவின் இந்த கொள்கை, அங்கு நடைபெற உள்ள குளிர்கால பாராலிம்பிக் போட்டிகளுக்கும் பொருந்தும் என்றும் சொல்லியுள்ளார். பல ஆண்டுகள் பயிற்சி எடுத்த நிலையில் தற்போது மொத்தமாக புறக்கணிப்பது என்பது தவறான நடவடிக்கையாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் அந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். தற்போது அதில் கனடாவும் இணைந்து உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவுடன் இணைந்து ஆஸ்திரேலியாவும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை தூதரக ரீதியில் புறக்கணிப்பதாகவும், சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் உறவு சில வருடங்களாகவே முறிவை கண்டுள்ளது என்றும், இந்த முடிவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு முயற்சிகளை சீனா கடுமையாக விமர்சித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை பெறுவதற்கான எங்களது முடிவை சீனா சாடியுள்ளது என்றும் கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், இதேபோல் அந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தூதரக அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். விளையாட்டு புறக்கணிப்புகள் விவேகமானவை என்று நான் நினைக்கவில்லை. அது அரசாங்கத்தின் கொள்கையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியானதை தொடர்ந்து சீனா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஷின்ஜியாங் மாகாணத்தின் மேற்கு பகுதிகளில் இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் நடந்ததாக வெளியான பல குற்றச்சாட்டுக்களையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா ஆகிய நாடுகள் அரசியல் செய்வதற்காக இந்த ஒலிம்பிக் போட்டிகளை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன. மேலும் எங்களை குற்றம் சாட்டுகின்றனர். இவர்களது தவறான செயல்களுக்காக தக்க விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் மிகுந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleவிளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு!
Next articleமத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! மாநில அரசுகள் அதிர்ச்சி!