மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! மாநில அரசுகள் அதிர்ச்சி!

0
52

மத்திய அரசும், இந்திய விமான நிலையங்கள் ஆணையமும், நாட்டில் இருக்கின்ற விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிட்ட இருக்கிறதா? அப்படி என்றால் அதன் விபரங்கள் என்ன தமிழகத்தில் இருக்கின்ற பன்னாட்டு விமான நிலையம் எதையாவது தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டு இருக்கிறதா? தனியார் வசம் ஒப்படைக்கும் போது பரந்து விரிந்து இருக்கின்ற விமான நிலையங்களின் நிலம் உட்பட சொத்துக்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்க்கபடுமா என்பது உட்பட பல்வேறு கேள்விகளை விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய விமானத்துறை இணை அமைச்சர் வி கே சிங் தெரிவித்ததாவது, எதிர்வரும் ஆண்டு ஆரம்பித்து வரும் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாட்டில் இருக்கின்ற 25 விமானநிலையங்கள் திறம்பட இயக்கவும், சிறப்பான மேலாண்மைக்காகவும் தனியாரிடம் ஒப்படைக்க இருக்கிறது. அரசு தனியார் பங்கேற்பு திட்டத்தின் அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்க இருக்கின்ற 25 விமான நிலையங்களில் தமிழ்நாட்டிலுள்ள மதுரை, திருச்சி கோயம்புத்தூர் மற்றும் சென்னை, உள்ளிட்ட விமான நிலையங்களும் அடங்கும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே எல்ஐசி நிறுவனத்தை நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவித்து தனியார் வசம் ஒப்படைத்தது மத்திய அரசு, இதனால் பொதுமக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள், தற்சமயம் விமான நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

இப்படியே போனால் நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து துறைகளையும் தனியாரிடம் தாரைவார்க்க மத்திய அரசு திட்டமிட்டாலும் சொல்வதற்கு இல்லை என்ற பேச்சுக்களும் எழத் தொடங்கியிருக்கின்றன.