நடிகர் சிம்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Photo of author

By Rupa

நடிகர் சிம்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Rupa

Actor Simbu admitted to hospital Shocked fans!

நடிகர் சிம்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சிம்பு என்று அழைக்கப்படும் எஸ்டிஆர் மக்கள் மத்தியில் பெரும் பெயர் பெற்றவர். இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைப்பர். இவரது தந்தை இயக்குனராக இருந்த காலத்தில் இருந்து நடித்து வருகிறார். இவர் சிறுவயதிலிருந்து நடிப்பதால் இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் நயன்தாராவை காதலித்து வந்தார். பிறகு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மன கசப்பால் பிரிந்தனர். அதனை அடுத்து ஹன்சிகா மோத்வானி காதலித்து வந்தார். இவர்களுக்கு இடையே உன் பிரிவு ஏற்பட்டது. மேலும் இவரைப் பற்றி பல கிசுகிசுக்கள் பேச ஆரம்பித்தனர். சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வராததால் இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதற்கிடையில் விஜய் சேதுபதி அருண் விஜய் அரவிந்த்சாமி சிம்பு ஆகியோர் ஆகியோர் கலந்த ஒரு தொகுப்பில் ஒரு படம் வெளியானது. அப்படம் சிம்புவுக்கு போதுமான அளவிற்கு பெயர் வாங்கித் தரவில்லை.. அதனை அடுத்து வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் நடித்தார். அப்படமும் பெரிய ஹிட் தரவில்லை. அதற்கு அடுத்ததாக பாரதிராஜாவுடன் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்தார். அப்படமும் பெரிதாக வெற்றிபெறவில்லை. இவர் நடித்த அடுத்தடுத்த படம் பெரும் தோல்வியில் முடிவடைந்தது. அதனால் இவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே தந்தது. வல்லவன் மன்மதன் விண்ணைத்தாண்டி வருவாயா காதல் அழிவதில்லை ஒஸ்தி போன்ற ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் நாளடைவில் வெற்றி படங்களை கொடுப்பதால் இவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தையும் கண்டனர். தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் சிம்பு நடித்தார்.

அப்படம் தற்பொழுது வெளியாகி வெற்றி வாகை சூடி வருகிறது. இப்படம் சிம்புவின் பெரிய கம்பாக் ஆக உள்ளது. தற்பொழுது சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில தினங்களாகவே சிம்புவுக்கு காய்ச்சல் இருந்து வந்துள்ளது. அதனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்பு கொரோனா பரிசோதனை எடுத்துக் கொண்டார். அந்த பரிசோதனை நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது. மேற்கொண்டு காய்ச்சலுக்கான சிகிச்சை எடுத்து வருகிறார்.