இதை செய்திருந்தால் நாம் ஆட்சியை கைப்பற்றி இருப்போம்! மருத்துவர் ராமதாஸ் பேச்சு!

0
143

ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றிருக்கிறது மாநில தலைவர் ஜிகே மணி முன்னிலை வகித்து இருகிறார். இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, நான் உங்களுக்காக பொதுவாழ்க்கைக்கு வந்து 42 ஆண்டுகள் ஆகின்றன என கூறியிருக்கிறார்.

நான் உங்களை சரியாக வழிநடத்தவில்லையா? என்ன தவறு செய்துவிட்டேன் 170 சாதியினரும் பயன்பெற போராடி இட ஒதுக்கீடு வாங்கி இருக்கின்றோம். கிடைத்த இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% கிடைப்பதற்காக தான் பாடுபட்டேன். 108 சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதனை எதிர்த்து தடுத்துவிட்டார்கள். தற்சமயம் அதற்கு தடை பெறுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.

வட தமிழகத்தை பொறுத்தவரையில் தடுக்கி விழுந்தால் வன்னியர்கள் மீதுதான் விழவேண்டும் இப்படி இருக்கும் சூழ்நிலையில், நாம் ஆட்சியை கை பெற்றிருக்கவேண்டும். வன்னியர்கள் மட்டும் 2 கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்களை நம்பி தானே நான் கட்சியை தொடங்கி இருக்கிறேன் தொடக்கத்தில் தனியாக போட்டியிட்டு 4 சட்டசபை உறுப்பினர்கள் கோட்டைக்குச் சென்றோம் என குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்த வெற்றி அப்படியே தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டிருந்தால் ஆட்சியை கைப்பற்றி இருக்கலாம். ஆனால் ஒரு சிலர் கூறியதன் பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு நாம் தோல்வியடைந்து விட்டோம். தேர்தலில் கூட்டணி என்றாலே நம் காலை வருவதாக இருக்கின்றது, கூட்டணி தர்மம் எல்லாம் அதர்மம் ஆகிவிட்டது என குறிப்பிட்டு இருக்கும் அவர், கடந்த சட்டசபை தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் குறைந்தது 15 தொகுதிகளை வென்று இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் 40 சட்டசபை உறுப்பினர்கள் பெற்ற குமாரசாமி மூன்று முறை முதலமைச்சர் என்ற பதவியில் அமர்ந்துவிட்டார். அவருடைய தந்தை பிரதமரே ஆகியிருக்கிறார். நீங்கள் ஒன்று சேர்ந்து பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு கொடுத்திருந்தால் இங்கும் அதேபோல நடைபெற்றிருக்கும். ஆனால் கர்நாடகத்தில் நடைபெற்றதை போன்ற ஒரு சம்பவம் இங்கே நடைபெறவில்லை. முடிவெடுக்க வேண்டிய இடத்தில் நீங்கள் தான் உள்ளீர்கள், எந்த கட்சியில் வன்னியர்கள் இருந்தாலும் ஓட்டு போடும்போது மட்டும் மாம்பழத்திற்கு போட வேண்டும். அப்படி செய்தால் 70 முதல் 80 சட்டசபை உறுப்பினர்கள் வரமுடியும் மற்ற சமூகத்தினரும் இதனை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.

Previous article15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிமுக உட்கட்சித் தேர்தல்! நாளைய தினம் தொடங்குகிறது!
Next articleகுன்னூர் ஹெலிகாப்டர் விபத்து! செல்போன் பறிமுதல்!