சுகாதாரத் துறையில் தமிழக அரசின் சிறந்த செயல்பாடுகளுக்காக இரண்டு விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து இருக்கிறது.
நாட்டின் 75வது சுதந்திரதினத்தை கொண்டாடும் விதத்தில் மத்திய அரசு ஆசாதி, கா அம்ரித் மஹோத்சவ் என்ற பிரச்சாரத்தை கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 12ம் தேதி வரையில் நடத்தியது. இதில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இருக்கின்ற அனைத்து நல்வாழ்வு மையங்களிலும் நடத்தப்படும் நோய்தொற்று அல்லாத நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படும் அமர்வுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இலக்குகள் வரையறுக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டன. தமிழகத்தில் சுதந்திரத்தின் அமிர்த பெரு விழா என்ற பெயரில் பிரச்சாரம் செயல்படுத்தப்பட்டது என்று தெரிகிறது.
இதில் நோய் தொற்று இல்லாத நோய்களுக்காக இருபத்தி 29 .85 லட்சம் பரிசோதனைகளை செய்து இந்திய அளவில் தமிழக அரசு முதலிடத்தையும், ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துவதற்காக 85 1514 அமர்வுகளை நடத்தி மூன்றாவது இடத்தையும், பிடித்திருக்கிறது. இதற்காக தமிழக அரசுக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
டெல்லியில் நடந்த விழாவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா விருதுகளை வழங்கினார், தேசிய நல்வாழ்வு குழும இயக்குனர் தரேஷ் அகமது, பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றுக் கொண்டார்கள்.
அதோடு நீலகிரி மாவட்டத்தில் இருக்கின்ற குன்னூர் வட்டத்திற்கு உட்பட்ட அச்சனகல் துணை சுகாதார நிலையத்தில் களப் பணியாளர்களின் அணி மிகச் சிறப்பாக பணியாற்றியதற்காக அந்த துணை சுகாதார நிலையத்திற்கு மிகச்சிறந்த துணை சுகாதார நல்வாழ்வு மையத்துக்கான விருது வழங்கப்பட்டது. தொற்று அல்லாத நோய்களை கண்டறிதல் உள்ளிட்டவற்றில் தமிழகத்திற்கு அடுத்தபடியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாவது இடத்தை கைப்பற்றியிருக்கிறது.