திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டதில் இருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என்று பலரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையை கொண்டு அதிரடி சோதனை செய்து வருகிறது.
அதற்கு எதிர்க்கட்சியான அதிமுக கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறது, அதாவது எதிர்க்கட்சி என்பது ஆளும் கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவதும் குறைகளை தெரிவிப்பது தான் எதிர்கட்சியின் பிரதான வேலை.அதையே செய்யக்கூடாது என்ற ஒரே நோக்கத்துடன் முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் என்றும் அதிமுகவினர் அவர் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 14 பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்றைய தினம் மீண்டும் சோதனை செய்து வருகிறார்கள். கடந்த 15ஆம் தேதி 69 பகுதிகளில் நடந்த சோதனையின் அடிப்படையில் 2.16 கோடி ரொக்கம் 1.13 கிலோ தங்கம் சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்ட சூழ்நிலையில், தற்சமயம் மறுபடியும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்கள், சேலத்தில் 1 இடம், என்று சோதனை நடந்து வருகிறது.
முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருடைய உறவினர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான 69 பகுதிகளில் சில்ஸ் நாட்களுக்கு முன் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினார்கள். அதோடு 5 வருடங்களில் வருமானத்திற்கு அதிகமாக 4.75 கோடி சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. தங்கமணி மட்டுமல்லாமல் அவருடைய மனைவி சாந்தி, மகன் தரணிதரன், உள்ளிட்டோர் மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், விசாரணையின் தொடர்ச்சியாக மறுபடியும் இன்று காலை 6 .30 மணி அளவில் 14 பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி ,எம் ஆர் விஜயபாஸ்கர், உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை நடத்தி இருக்கின்ற சூழ்நிலையில், தற்போது 5வது நபராக தங்கமணி அவர்களும் இந்த சோதனையை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சேலம் சூரமங்கலம் பகுதியில் இருக்கின்ற தங்கமணியின் நண்பர் குழந்தைவேலுவின் மகன் மணிகண்டன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.