டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் !!காவல் நிலையத்தில் ரசிகர்கள் புகார்!!

0
252

டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டும் !!காவல் நிலையத்தில் ரசிகர்கள் புகார்!!

போனி கபூர் தயாரிப்பில் H.வினோத் இயக்கி அஜித் நடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது.

சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி படத்தை திரையிடும் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், வலிமை திரைப்படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கக் கோரி அஜித் ரசிகர்கள் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வலிமை திரைப்படத்திற்கான முன்பதிவு இன்னும் துவங்காத நிலையில், ரசிகர்களுக்கான பிரத்யேக காட்சிகளை திரையிடும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் 120 ரூபாய் மதிப்புடைய ஒரு டிக்கெட்டுக்கு 1000 ரூபாய் வரை விலை நிர்ணயித்து வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரையடுத்து கோவை மாவட்ட அஜித் ரசிகர்கள் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Previous articleவாக்கு சதவீதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது!!தலைமை தேர்தல் ஆணையர்!!
Next articleநோய்த்தொற்று பரவல் எதிரொலி! மும்பையில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here