சென்னையில் மழையின் எதிரொலி! முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு!

0
164

சென்னையில் நேற்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட சூழ்நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. குறிப்பாக திருவல்லிக்கேணி, அண்ணாசாலை, தியாகராயரநகர், தேனாம்பேட்டை, மெரினா கடற்கரை, பட்டினபாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, எம்.ஆர்.சி. நகர், ஆதம்பாக்கம், கேளம்பாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பல மணி நேரமாக மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியுற்றார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதோடு சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மிகத்தீவிரமாக பணிபுரிந்து வருகிறார்கள் என்றும், சொல்லப்படுகிறது. ராட்சத மோட்டார்கள் மூலமாக தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை ரிப்பன் மாளிகையில் இருக்கின்ற மாநகராட்சி பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தினார் .அப்போது மழை பாதிப்பு மற்றும் மாநகராட்சி மேற்கொண்டு வரும் மழைநீர் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டறிந்தார் என்று சொல்லப்படுகிறது.

அதோடு பொதுமக்கள் வழங்கியிருக்கின்ற புகார்கள், அதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும், சென்னை மாநகராட்சி ஆணையர் முதலமைச்சரிடம் விளக்கம் கொடுத்தார். மேலும் மழை பாதிப்பை சரி செய்யும் பணிகள் தொடர்பாகவும், மாநகராட்சி அதிகாரிகள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் விளக்கமளித்தார்கள்.