கொரோனாவால் நடுநடுங்கும் ரஷ்யா! 80 ஆயிரத்தை கடந்த பலியானோரின் எண்ணிக்கை!

0
110

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளில் கடுமையான பாதிப்பை உண்டாக்கி வருகின்றது. அதனை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பலவும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள், இருந்தாலும் அந்த நோய்த்தொற்று பரவல் அவ்வளவு எளிதில் கட்டுப்படுவதாக தெரியவில்லை.

இந்த சூழ்நிலையில், இந்த நோய் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது, ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக நோய் தொற்று நோய்களின் தாக்கம் வேகமெடுத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் ரஷ்யாவில் இந்த நோய்த்தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 8,7500 ஐ தாண்டி இருக்கிறது.

ரஷ்யாவில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிப்படைந்து இருக்கிறார்கள், அங்கு இதுவரையில் இந்த நோய் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 6.58 லட்சத்தை கடந்து இருக்கிறது.

Previous articleபுதிய வகை நோய் தொற்று! உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு!
Next articleஅதிகரிக்கும் கொரோனா தொற்று! சுகாதார அமைச்சகம் தகவல்!!