புதிய வகை நோய் தொற்று! உலக நாடுகளை எச்சரிக்கும் சுகாதார அமைப்பு!

0
81

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய நோய்த்தொற்று மிகப்பெரிய தாக்குதலை நடத்தி வருகின்றது. பிரான்சில் தொடர்ந்து இரண்டு நாட்கள் தினமும் 2 லட்சத்து 8 ஆயிரம் பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஐரோப்பாவில் இதுவே அதிகபட்ச பாதிப்பு என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில், சென்றவாரம் நோய் தொற்று பாதிப்பு வெகுவாக பரவியது தினசரி சராசரியாக 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உண்டானது. டென்மார்க், போர்ச்சுகல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நோய்த்தொற்று பரவல் புதிய உச்சங்களை தொட்டு வருகின்றது. நோய்த்தொற்றின் நான்காவது அலையில் இருக்கின்ற போலந்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 794 பேர் பலியாகி இருக்கிறார்கள். இங்கே நான்கில் மூன்று பேர் தடுப்பூசித் எடுத்துக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் மருத்துவர் டெட்ரோஸ் சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, புதிய வகை நோய் தொற்றும், டெல்டா வைரஸும், ஒன்றாக இணைந்து சுனாமி பேரலையாக மாறுவதற்கான ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை செய்தார்.

அதோடு தற்சமயம் நோய் தொற்று பாதிப்பு சாதனை அளவாக அதிகரிக்கும் விதத்தில் டெல்டா வைரஸும், புதிய வகை நோய் தொற்றும் இரட்டை அச்சுறுத்தலாக இருக்கின்றன. இதன்காரணமாக, மருத்துவமனை சேர்க்கைகளும், இறப்புகளும், அதிகரித்து வருகின்றன.

புதிய வகை நோய் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது என்பது எனக்கு கவலை தருகிறது அதே சமயத்தில் மிகவேகமாக பரவி வருகிறது. இந்த இரண்டு வைரஸ்களும் சுனாமி பேரலை போல மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இது மிக வேகமாக நகர்ந்து வருகிறது தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதுடன் கூடுதலாக நோய் தொற்று நோய்களை தடுக்க பொது சுகாதார சமூக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. மருந்து உற்பத்தி நிறுவனங்களும், பணக்கார நாடுகளின் தலைவர்களும், ஆல்பா பீட்டா, காமா டெல்டா, தற்சமயம் புதிய வகை நோய்த்தொற்று உள்ளிட்டவைகளில் இடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். 70 சதவீத மக்களை தடுப்பூசி சென்றடைவதற்கு இணைந்து பணிபுரிய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.