தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேசன் கார்டுக்கு ரூபாய் 5000?
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசின் சார்பில் ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரூ.5 ஆயிரம் பணமும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டும் ரூ.505 மதிப்புள்ள பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு உள்ளிட்ட 21 வகை பொருட்களை அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்திற்காக ரூ.1,17 ,70,000 ரூபாயை நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசு அறிவித்துள்ள இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று சென்னையில் பல்வேறு இடங்களில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணியானது ஆரம்பித்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் இந்த டோக்கனில் பரிசு பெறும் நபரின் பெயர், நாள் மற்றும் நேரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. டோக்கன்கள் வழங்கப்பட்ட பின்னர் தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொடுத்தது போல பொங்கல் பரிசுத்தொகை குறித்து எவ்வித அறிவிப்புகளும் இந்த ஆண்டு வெளியான அறிவிப்பில் இடம் பெறவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது 5 ஆயிரம் ரூபாய் பரிசு தொகுப்பில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது திமுக ஆளும்கட்சியாக உள்ள இந்நிலையில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் திமுக கூறியது போல பொங்கல் பரிசுத் தொகையாக 5 ஆயிரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
சமீபத்தில் இந்த பொங்கல் பரிசுத் தொகை குறித்து உணவு வழங்கல் துறை அமைச்சரிடம் கேட்ட போது, இந்த பரிசுத்தொகை குறித்து தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது ஆனால் இதுவரை ரொக்க பணம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பொங்கல் பரிசுதொகைக்காக மத்திய அரசிடம் கூடுதலாக நிதியுதவி பெற்று தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 5,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.