பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு! பொது மக்கள் அமைதியான முறையில் கொண்டாட்டம்!

0
141

ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் உலக நாடுகளில் வாணவேடிக்கையுடன் அனைத்துத் தரப்பு மக்களும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். புதிய வகை நோய் தொற்றுக்கான அச்சுறுத்தலுக்கு இடையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, உள்ளிட்ட, முக்கிய நகரங்களில் புத்தாண்டு தினத்தன்று பொது மக்கள் வழக்கமாக ஒன்று கூடும் பகுதிகளில் இந்த வருடம் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு மாநில அரசுகளும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் பொது இடங்களில் பாட்டு, நடனம், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சென்னையில் இதன் காரணமாக, புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அதேசமயம் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது, அதனடிப்படையில் கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கியது. கேக் வெட்டி ஆடல், பாடல், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி பொதுமக்களை புத்தாண்டை வரவேற்றார்கள்.

தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ப்ரார்த்தனைகள் நடைபெற்றது. ஒரு சில ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன, இதில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று கொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அடக்கமான கொண்டாட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொண்டாடப் படவில்லை என்றாலும் கூட இந்த வருடம் சிறந்த வருடமாக அமைய வேண்டும் என்று அமைதியான முறையில் பொதுமக்கள் புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள்.

Previous articleமீண்டும் வேகம் எடுக்கும் முழை! சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
Next articleசென்னையில் அரசு பள்ளி விடுதியில் 34 மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவல்!