நோய் தொற்று பாதித்தவர்களுக்கான புதிய நெறிமுறைகள்! தமிழக அரசு அதிரடி உத்தரவு!

0
131

நோய்த் தொற்று பாதிப்பு இருக்கின்ற நோயாளிகளுக்கு வழங்கும் சிகிச்சைகளில் இருக்கின்ற மேம்பாடு குறித்த பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியிருக்கிறது அதற்கான வழிமுறைகளை மருத்துவ கல்வி இயக்குனர் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

அதனை தமிழக அரசு கவனமுடன் பரிசீலனை செய்து அதை அங்கீகரிக்க முடிவு செய்திருக்கிறது அதன் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோய்த் தொற்று பாதித்து அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் சந்தேகத்திற்கிடமானவர் அல்லது உறுதி செய்யப்பட்டவர் என்றாலும் உடனடியாக சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தற்சமயம் புதிய வகை நோய் தொற்று மிக வேகமாகப் பரவ கூடியதாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது, ஆகவே சுகாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை அது ஏற்படுவதை தடுப்பதற்காக உடனடி கவனிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசியமாக எல்லோரும் மேற்கொள்ள வேண்டும், போதுமான விழிப்புணர்வு இல்லாமை அதிகமாக இருப்பதாலும் வீட்டில் தனிமைப் படுத்தப்பட வேண்டியவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு இடமில்லாமல் போகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வீட்டில் தனிமைப்படுத்த வசதியில்லாத நோய்த்தொற்று பாதித்தவர்கள் கவனிப்பு மையங்களுக்கு அனுப்பப்பட வேண்டும், நோய்க்கு ஆளான கர்ப்பிணிகள், 60 வயதை கடந்த நோயாளிகள் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

கடுமையான நோயாளிகள், நோய்த்தொற்று மரணம் உள்ளிட்டவை தொடர்பாக உயர்மட்ட மையங்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும். தடுப்பூசி செலுத்தாத மற்றும் நோய் தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் கணிப்பு மையங்களில் 5 நாட்கள் வைத்து கணிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது.

தடுப்பூசி செலுத்தாத மற்றும் அறிகுறி இல்லாத நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப் படவேண்டும், ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை காய்ச்சல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும், பரிசோதனை மீண்டும், மீண்டும் செய்யப்பட வேண்டியதில்லை நோய் தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கும் தடுப்பூசி போடாத நோய்தொற்று உள்ளவர்களுக்கு இது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று இருப்பவர்கள் அதற்கான வார்டுகளில் அனுமதிக்கப்படவேண்டும், நோய் சந்தேகம் இருப்பவர்கள் தனிமையான வார்டுகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும், உயர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு உடனடியாக அவசர ஊர்தி மூலமாக அதற்கான மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும், எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த நெறிமுறைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇனி மருதானிலேயே ஜாக்கெட் போடலாம்! இணையத்தை கலக்கி வரும் புதிய ட்ரெண்டு!
Next articleமாநிலத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!