இதற்குமேல் ஆளுநர் முதலமைச்சர் உறவுக்கு வேறு என்ன வேண்டும்? சபாநாயகர் அப்பாவு!

0
145

2022 ஆம் ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை ஆரம்பிக்க இருக்கிறது. புதிய வகை நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த கூட்டத் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் இருக்கின்ற கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை கிண்டியில் இருக்கின்ற ராஜ்பவனுக்கு நேற்று நேரடியாக சென்று சபாநாயகர் கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து இந்த வருடம் நடைபெற இருக்கின்ற முதல் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்ற வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டு இருக்கிறார் சபாநாயகர்.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, சட்டசபைக்கு வருபவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் அதோடு தற்போதைய நோய் தொற்று பரிசோதனை மேற்கொண்டு இருக்க வேண்டும், அப்போதுதான் சட்டசபைக்கு வருவதற்கான அடையாள அட்டை வழங்குவோம், சென்ற வருடத்தைப் போல காகிதம் இல்லாத பட்ஜெட் இந்த வருடமும் தொடரும் என்று தெரிவித்திருக்கிறார்.

சென்ற வருடத்தைப் போலவே இந்த வருடமும் அவையை நடத்த நல்ல ஒத்துழைப்பை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழங்குவார்கள் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஏனென்றால் முதலமைச்சர் எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தன்னுடைய சட்டசபை உறுப்பினர்களை பேச வைக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

கவர்னரை நாங்கள் சந்தித்த போது கூட அவர் எங்களிடம் முதலமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார், மக்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும், அதற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவராகவும், இருக்கிறார் எனவும், அதிசக்திவாய்ந்த முதலமைச்சராக இருக்கிறார் என்றும், குறிப்பிட்டார் ஏனென்றால் முதலமைச்சரின் நடவடிக்கைகளை அவர் கவனிக்கிறார் என கூறியிருக்கிறார்.

இதற்குமேல் கவர்னர் மற்றும் முதலமைச்சரின் உறவுக்கு வேறு என்ன வேண்டும்? சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக முறையின் அடிப்படையில் சட்டசபை நடக்கும் சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறியிருக்கிறார். இந்த பேட்டியின் போது துணை சபாநாயகர் பிச்சாண்டி உடன் இருந்தார் என்று சொல்லப்படுகிறது.

Previous articleமாநிலத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!
Next articleஇந்த வருடம் ஜல்லிக்கட்டு நடைபெறுமா? முதலமைச்சர் முக்கிய ஆலோசனை!