தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம்! இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
159

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2022ஆம் ஆண்டு பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்காக அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் மற்றும் முழு கரும்பு கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

அத்துடன் பொங்கல் வைப்பதற்கு தேவைப்படும் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், உள்ளிட்ட பொருட்களும் சமையலுக்கு தேவைப்படும் மஞ்சள்தூள், மிளகாய்தூள், மல்லிதூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, உள்ளிட்டவற்றுடன் துணிப்பை வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இரண்டு கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பொங்கல் தொகுப்பு பைகளை நியாயவிலை கடைகளுக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த சூழ்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆரம்பித்து வைத்திருக்கிறார். டோக்கன் முறையில் அன்றைய தினமே ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது.

ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு உடன் சேர்த்து தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.

ஆனால் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இதனை கடுமையாக ஆட்சேபித்தது அதாவது 2500 ரூபாய் கொடுப்பதை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அது பற்றாக்குறையாக இருப்பதால் ஒரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்று தெரிவித்து கடுமையாக ஆட்சேபித்தது.

ஆனால் தற்சமயம் திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்திருக்கின்ற சூழ்நிலையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் கொடுத்த 2500 ரூபாய் பணத்தையும் அரவே நிறுத்திவிட்டு வெறும் பொருட்களை மட்டும் கொடுத்து அனுப்புகிறது என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.

Previous articleமுக கவசம் அணியாதோருக்கு அபராதம் ஒரே நாளில் 2 லட்சத்தை கடந்த வசூல்! சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!
Next articleஅந்த விவகாரத்தில் யாரும் உணர்ச்சி வசப்படக் கூடாது! பொறுமையுடன் காத்திருங்கள் அண்ணாமலை அதிரடி பேட்டி!