இந்த நாட்களில் 144 தடை உத்தரவு! அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
கொரோனா தொற்றானது டெல்டா டெல்டா ப்ளஸ் என தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வந்தது. அவ்வாறு வந்த போதும் மக்கள் அதனை கடந்து மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்தை புதிதாகவே தொடங்க ஆரம்பித்தனர். தற்பொழுதுதான் இரண்டாம் அலை முடிந்து மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் கொரானாவின் உரு மாற்றமாக ஒமைக்ரான் தீவிரமாக தற்போது பரவி வருகிறது.சென்றமுறை கொரோனா தொற்று ஏற்பட்டபோது அதிக அளவு உயிர் சேதங்களை இந்தியா சந்தித்து விட்டது. அதுபோல இம்முறை நடக்காமல் இருக்க அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது.
அந்தவகையில் மேற்குவங்க அரசு , ஹரியானா ,கோவா போன்ற மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். டெல்லியும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக தற்போது கர்நாடக மாநில அரசும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதுகுறித்து நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதுமட்டுமின்றி பெங்களூருவில் ஓர் பக்கம் இரவு ஊரடங்கு அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அந்த இரவு ஊரடங்கையும் இரு வாரங்களுக்கு நீட்டித்துள்ளனர்.
அத்தோடு வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை முழு நேர ஊரடங்கு என தற்பொழுது கர்நாடகா மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.அதேபோல பெங்களூரில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வரும் 6-ஆம் தேதி முதல் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்க வேண்டும் என பள்ளிகளுக்கு மாநில அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் அவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெறும் என கர்நாடக மாநில அரசு கூறியுள்ளது.