மாநாடு படம் குறித்து புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்!

Photo of author

By Parthipan K

மாநாடு படம் குறித்து புகழ்ந்து தள்ளிய பிரபல இயக்குனர்!

அண்மையில் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படம் அறிவித்த தேதியில் திரையரங்குகளில் வெளியாகுமா? ஆகாதா? என்கிற குழப்பத்துக்கு மத்தியில் நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு ஒரு வழியாக சொன்ன தேதியில் கடந்த நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வசூலில் வாரி குவித்தது.

சிம்புவின் திரை வாழ்விலும் இந்த படம் ஒரு மறக்க முடியாத வெற்றி படமாக அமைந்தது. சிம்புவிற்கு ஒரு திருப்புமுனை படமாகவும் இது அமைந்தது. இந்த நிலையில் நேரம், பிரேமம் ஆகிய படங்களின் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் தனது முகநூலில் மாநாடு படம் தொடர்பான தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் அவர், மாநாடு படம் பார்த்தேன். மன்மதன் படத்தை போல இந்த படத்திலும் சிம்பு சிறப்பாக நடித்துள்ளதாகவும், எஸ்.ஜே.சூர்யா தனது இயக்கத்தை போல நடிப்பிலும் கலக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, பின்னணி இசை, சண்டைக் காட்சிகள், படத்தொகுப்பு, இயக்கம் என அனைத்தும் நன்றாக இருப்பதாகவும் வெங்கட் பிரபு, யுவன் நிமிர்ந்து நில் துணிந்து செல் பாடல் என்னை பல்வேறு தருணங்களில் நம்பிக்கை அளித்ததாகவும் அதற்காக நான் உங்களுக்கு என்ன செய்யப்போகிறேன் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.