அஜித் திமுக: புதிய அரசியல் கட்சியால் பெரும் பரபரப்பு

0
200

அஜித் திமுக: புதிய அரசியல் கட்சியால் பெரும் பரபரப்பு

அஜித்தை அரசியலுக்கு இழுக்க வேண்டும் என அதிமுக, பாஜக உள்பட பல கட்சிகள் முயற்சி செய்து வரும் நிலையில் திடீரென மதுரையில் ’அஜித் திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது

மதுரையில் உள்ள முக்கிய இடங்களில் ’அஜித் திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் அஜித் மற்றும் எம்ஜிஆர் படங்கள் இருக்கின்றன என்பதால் அஜித் ரசிகர்கள் அல்லது எம்ஜிஆர் அபிமானிகள் இந்த போஸ்டரை ஒட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது

இருப்பினும் இந்த பெயரில் உண்மையிலேயே கட்சி ஆரம்பிக்கப்பட்டதா? என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

அஜித் பெயரில் கட்சியை ஆரம்பித்திருந்தால் கண்டிப்பாக அஜித் தரப்பில் இருந்து மறுப்பு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனது ரசிகர்கள் பாஜகவில் இணைந்தது குறித்து வெளிவந்த செய்தியை அடுத்து அஜித் தனது எதிர்ப்பை அறிவிப்பு ஒன்றின் மூலம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅசைக்க முடியாத நிலையில் இந்தியா
Next articleபொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here