பிரதமரின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து! காரணம் என்ன?

0
119

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அகில இந்திய இளைஞர் திருவிழா வருகின்ற 12ஆம் தேதி ஆரம்பித்து 16ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதற்கு தேவையான முன்னேற்பாடுகள் தொடர்பான பணிகளை புதுச்சேரி அரசு முன்னெடுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை மத்திய அமைச்சர் நேற்று முன்தினம் விழாவிற்கான ஏற்பாடுகளை நோட்டமிட்டார்.

இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து சுமார் 7500 இளைஞர்கள் பங்கேற்றுக் கொள்வார்கள் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்து இளைஞர்களுக்கு உரையாற்றுவார் என்றும் சொல்லப்பட்டது.

இதற்கிடையே தற்சமயம் நோய்த்தொற்றின் 3வது அலை மற்றும் புதிய வகை நோய் தொற்று வேகமாக நாடு முழுவதும் பரவி வருவதன் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் புதுச்சேரி வருகை ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அவர் காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைப்பார் என்று சொல்லப்படுகிறது, இந்த தகவலை பாஜகவின் வட்டாரங்கள் உறுதி செய்திருக்கின்றன.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இளைஞர் விழாவில் இரண்டு தவனை தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய இயலும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, இதனால் இளைஞர்கள் வருகையும் குறையும் என்று சொல்லப்படுகிறது.

Previous articleசென்னையில் மருத்துவர்களை அலறவிடும் நோய் தொற்று பாதிப்பு!
Next articleதமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு! சசிகலா கடும் கண்டனம்!