கோவையில் முழு ஊரங்கு? பேரடியை சந்திக்கப்போகும் தொழில்துறை!
தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் அலை குறைந்த இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தற்போது அதி தீவிரமாகபரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. நமது தமிழகத்தில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபட தடைசெய்துள்ளது. இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு என கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் திரையரங்குகள் என அனைத்து இடங்களிலும் 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. தற்போது பரவிவரும் இந்த மூன்றாவது அலை மக்களை அதிக அளவு தாக்கி வருகிறது. தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முழு ஊரடங்கு போடப்படும் என்றும் கூறியுள்ளனர். கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் அங்கு உள்ள தொழில்துறை அனைத்திற்கும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் என கூறி வருகின்றனர். இவ்வாறு முழு ஊரடங்கு அமல் படுத்த நேரிட்டால் தொழில் துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் அதிக அளவு சிரமப்படுவர்.
அதனால் தொழில் துறை ஊழியர்கள் அரசாங்கத்திடம் தற்பொழுது வேண்டுகோள் வைத்துள்ளனர். தொழில் சாலைகள் அனைத்திலும் அரசாங்கம் கூறும் அனைத்து கட்டுப்பாடுகளையும் கடைப்பிடித்து வருகிறோம். அதனால் தொழில் நிறுவனங்களில் முழு ஊரடங்கு போடுவதை தவிர்ப்பது நல்லது என தொழில் துறை ஊழியர்கள் தமிழக அரசிடம் கேட்டு உள்ளனர். அதுமட்டுமின்றி தொழில் துறைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பொருளாதார பாதிப்பு அதிக அளவு ஏற்படும் காரணத்தினாலும் முழு ஊரடங்கு போடுவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மேற்கொண்டு முழு ஊரடங்கு குறித்து புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டு வந்தாலும் தொழில் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.