இனி நெட் பாங்கிங் மூலமே மணல் வாங்கிக் கொள்ளலாம்! அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!
திமுக அரசு ஆட்சிக்கு வந்த முதல் பல நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. தமிழகத்திலுள்ள ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து விற்று வருவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தது. தற்பொழுது மீண்டும் ஆற்றுப்படுகைகளில் இருந்து மணல் எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் பணி மீண்டும் துவங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தமிழகத்தில் ஆற்றுப்படுகைகளில் இருந்து ஆற்று மணலை எடுத்து மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் பணிகளை தொங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அவ்வாறு ஆய்வு செய்யப்பட்டதன் மூலம் மணல் நுகர்வோருக்கு விற்பனை செய்வது குறித்து வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் ஏழை எளியோர் என அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த வழிமுறைகள் கடைப்பிடித்து மணல் விற்பனை செய்யுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில் முதல்வர் கூறியது, பொதுமக்களின் நலனை விரும்பும் இந்த அரசு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மக்கள் இணையதளம் மூலம் மணல் தேவையை விண்ணப்பிக்கலாம். அவர விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் மணல் வழங்கப்படும். அதனையடுத்து மீதமுள்ள மணலை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மீதமுள்ள அவருக்கு வழங்கப்படும். தற்பொழுது 16 லாரி குவாரிகள் மற்றும் 27 மாட்டு வண்டி குவாரிகள் இயங்குவதற்கு சுற்றுச்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது. தற்போதைய உள்ள தகவல் தொழில் நுட்பம் பயன்படுத்தி மணல் விற்பனை செய்யப்படுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு மணல் கிடங்குகளில் கூடுதலாக செயல்பட உள்ள வங்கிகளின் கவுண்டர்களில் பணம் செலுத்தியும் பொதுமக்கள் மணலை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போதைய நடைமுறையில் உள்ள நெட் பேங்கிங் டெபிட் கார்ட் மற்றும் யுபிஐ ஆகிய ஆன்லைன் பரிவர்த்தனை வழியாகவும் பொதுமக்கள் பணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளார்.