இன்று முதல் கோவிலில் இவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி!

0
102

இன்று முதல் கோவிலில் இவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி!

கொரோனா பெருந்தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து மேலும் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து கடந்த வாரத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கபட்டது. நேற்று ஊரடங்கு அமலுக்கு வந்ததை தொடர்ந்து போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த வகையில் திருவண்ணாமலையிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

அந்த வகையில் திருவண்ணாமலையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் திருவண்ணாமலை கோவில் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இன்று முதல் 14-ந் தேதி வரை சாமி மாட வீதிஉலாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் மேலும் இந்த வீதிஉலா போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும் என்றும் 15-ந் தேதி திருவூடல் நிகழ்ச்சி கோவில் வளாகத்திலேயே நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்  2 தவணை கொரோனா தடுப்பூசி  செலுத்தியவர்கள் மட்டுமே இன்று முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது செல்போனில் பெறப்பட்ட குறுஞ்செய்தியை காண்பித்தால் மட்டுமே அவர்கள் கோவில் வளாக்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.