அரசு ஊழியர்களுக்கு இந்த நாளில் பணி நாள்! வெளிவந்த திடீர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களே தமிழக பொங்கல் பண்டிகை இந்த வாரம் நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகையில் இருந்து அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர் இன்றி வெளியூர்களில் வேலை புரிந்து வருகின்றனர். அவர்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஒரு மாதம் முன்பு தங்கள் டிக்கெட்டுகளை புக் செய்துள்ளனர். மேலும் சொந்த ஊருக்கு செல்வதற்கு என்றேன் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
இன்றும் நாளையும் சொந்த ஊருக்கு செல்ல பயணிகள் அதிக அளவு கூட்டம் கூடுவர், என்பதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. நேற்று தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன் விடுமுறை நாள் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியது, தற்பொழுது தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை வர உள்ளது. கர்நாள் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.அதேபோல 18ஆம் தேதி தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறை.
16 மற்றும் 18 ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாளான 17 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலர்களுக்கும் உள்ளூர் விடுமுறை என கூறினார். அதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் திங்கட்கிழமை 17ஆம் தேதி அரசு விடுமுறை நாளாக அளிக்கப்படுகிறது. அன்று அரசு விடுமுறை நாளாக அறிவித்ததால் வரும் சனிக்கிழமை இருபத்தி ஒன்பதாம் தேதி என்று பணி நாளாக அறிவித்து ஆணை வெளியிட்டுள்ளனர்.