12-1-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
157

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதன் அடிப்படையில் இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.

இதற்கு நடுவில் கடந்த 68 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், 69-வது நாளாக தலைநகர் சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை அதே நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் நீடித்து வருகிறது.

Previous articleஅடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்களை வேட்டையாடும் காவல்துறையினர்! அடுத்து கைதாகும் முன்னாள் அமைச்சர் இவர்தானா?
Next articleஅரசு ஊழியர்களுக்கு  இந்த நாளில் பணி நாள்! வெளிவந்த திடீர் அறிவிப்பு!