விண்ணில் பாய்ந்தது கார்டோஸாட் 3

0
246

ஹரிகோட்டா, நவம்பர். 27-சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கார்டோஸாட் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 26 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது.

இன்று காலை சரியாக 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட கார்டோசாட் செயற்கைகோள் புவி நீள் வட்ட பாதையில் நிலை நிறுத்தபட்டது. 1,625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளில் அதி நவீன காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் மூலம் இந்தியாவின் எல்லைகளை தெளிவாக படம் பிடிக்க முடியும்.

மேலும் வானத்தில் மேக கூட்டங்கள் அதிகமாக இருந்தாலும் அதை தாண்டி இந்த செயற்கைகோளால் படம் பிடிக்க முடியும். அதற்கு ஏற்ப கட்ரோசாட் செயற்கைகோள் 509 கிலோமீட்டர் தொலைவில் 97.5 கோணத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளது. 5 ஆண்டுக்கு இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தி இந்திய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என isro தெரிவித்துள்ளது.

மேலும் வானத்தில் மேக கூட்டங்கள் அதிகமாக இருந்தாலும் அதை தாண்டி இந்த செயற்கைகோளால் படம் பிடிக்க முடியும். அதற்கு ஏற்ப கட்ரோசாட் செயற்கைகோள் 509 கிலோமீட்டர் தொலைவில் 97.5 கோணத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளது.

5 ஆண்டுக்கு இந்த செயற்கைக்கோளை பயன்படுத்தி இந்திய பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் எனisroதெரிவித்துள்ளது.

கட்ரோசாட் செயற்கை கோளுடன் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 சிறியவகை செயற்கை கோள்ககளும் நீள் வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது . இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் சிவன் அடுத்த மாதம்,6 செயற்கைகோளுடன் மேலும் ஒரு செயற்கைகோள் ஏவப்படும் என்றார்.

Previous articleஅன்புமணி ராமதாஸ் ஸ்டாலினை காப்பி அடிக்கிறாரா? திமுக உடன்பிறப்புகள் செய்யும் காமெடி
Next articleசாலை விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறையினர் தரும் ஷாக் ட்ரீட்மெண்ட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here