வெற்றிடத்தை ரஜினி நிரப்புவாரா? பாஜக பிரமுகர் அளித்த அதிரடி பதில்

0
228

வெற்றிடத்தை ரஜினி நிரப்புவாரா? பாஜக பிரமுகர் அளித்த அதிரடி பதில்

முன்னாள் தமிழக முதல்வர்களாக கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கமல், ரஜினி உள்பட ஒருசிலரும், வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டதாக அதிமுக, திமுகவினர்களும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த ரஜினிகாந்த், தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளது என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த கருத்துக்கு அதிமுக, திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ரஜினியின் ‘வெற்றிடம்’ குறித்த கருத்துக்கு தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியபோது, ‘ரஜினியின் அரசியல் வருகை வெற்றிடத்தை நிரப்பும் என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியாது. வெற்றிடத்தை நிரப்ப வெளியில் இருந்து எந்த ஸ்பெஷலிஸ்டையும் பாஜக எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

ரஜினியை பற்றி ஏதாவது கூறினால்தான் தங்களுடைய பெயர் ஊடகங்களில் வரும் என்ற நிலையில் அரசியல்வாதிகள் தங்களுடைய பேட்டிகளில் ரஜினி குறித்த கருத்தை வலுக்கட்டாயமாக தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது

Previous articleஹரிஷ் கல்யாணிற்கு சூப்பர் ஸ்டார் பாராட்டு!
Next articleஇளம்பெண்ணை காருக்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூரன்! 19 வயது மாணவிக்கு நடந்த சோகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here