ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை- தமிழ்நாடு அரசு தகவல்!

0
168

3வது ஒரு மொழியை கற்பதில் என்ன பிரச்சினை என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், இருமொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவு என தமிழக அரசு கூறிய நிலையில், மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது என தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பி உள்ளது.

வேறு மாநிலங்களில் பணியாற்றும் தமிழர்களுக்கு ஹிந்தி தெரியவில்லை என்றால், பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படும் என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு கூறியுள்ளனர்.

கூடுதலாக ஒரு மொழியை சேர்ப்பதன் காரணமாக என்ன சிக்கல் ஏற்பட போகிறது என பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்த கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது கருத்து தெரிவித்துள்ளது.

Previous articleஇந்தியாவின் எதிரி சீனா- அகிலேஷ் யாதவ் பேட்டி!
Next articleவேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்- தாலிபான்கள் ஆட்சியால் பின்னடைவு!