நகர்புற உள்ளாட்சித் தேர்தல்! கள்ள ஓட்டுக்களை தடுக்க அதிரடியாக களமிறங்கிய தேர்தல் ஆணையம்!

0
111

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் நேற்று மாலை அறிவித்தது, அதன் அடிப்படையில் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது.

அதோடு தேர்தலின்போது முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, பொது மக்கள் சுதந்திரமாகவும், தைரியமாகவும், வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்திடவும், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களால் கண்காணிக்கப்பட்டு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படுவதுடன், வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் அதோடு இணையதள கண்காணிப்பு திட்டத்தின் மூலமாக கண்காணிக்கப்பட இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதட்டமான வாக்குச்சாவடிகள் இணையதள கண்காணிப்பு மூலமாகவும், கண்காணிக்கவும் அப்படி அமைக்கப்பட இயலாத வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமராவுடன் மத்திய அரசு நிறுவனங்களை சேர்ந்த அலுவலர்களை பார்வையாளராக நியமனம் செய்து கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மற்ற அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மூலமாக போதுமான உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன என கூறப்பட்டுள்ளது.

வாக்கு என்னும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கின்ற உட்புறம் மற்றும் வெளிப்புறம் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க போதுமான உத்தரவுகள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleவார்த்தை தவறுதலாக வந்துவிட்டது! நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!
Next articleவாய்க் கொழுப்பால் சிக்கிக்கொண்ட பாஜக! கறார் காட்டும் அதிமுக!