28 நாட்களில் இருந்து 30 நாட்களாக மாற இருக்கும் பிரீபெய்டு திட்டம்: டிராய் உத்தரவு

0
163
Representative image

பிரீபெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் நாட்களை 28 நாட்களில் இருந்து 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் டிராய் உத்தரவிட்டுள்ளது.

மொபைல் போன் பிரீபெய்டின் 1 மாத திட்டம் எனப்படும் வவுச்சர்கள் அனைத்தும் 28 நாட்களாகவே உள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆண்டு ஆண்டிற்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. இதனால் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பிரீபெய்டு திட்டத்தில் 30 நாள் திட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது.

டிராய் உத்தரவின்படி திட்ட வவுச்சர், சிறப்பு டாரிப் வவுச்சர் மற்றும் காம்போ வவுச்சர் ஆகியவற்றில் ஒவ்வொரு திட்டத்திலும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும். இதன்மூலம் ஆண்டு ஆண்டிற்கு 12 முறை மட்டும் ரீசார்ஜ் செய்யலாம்.

Previous articleஇப்படியெல்லாம் கூட வினோதமாக செக்ஸில் ஈடுபடுகிறார்களா?
Next articleதிருமணமான நான்கு மாதங்களில் புதுப்பெண் தற்கொலை