ஒரே இரவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! காஷ்மீரில் தூங்காத மக்கள்!

0
125

ஜம்மு காஷ்மீரில் கடந்த 12 மணி நேரத்தில் 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தானால் பயிற்சி அளிக்கப்பட்ட தீவிரவாதிகள் ஊடுறுவல் அதிகமாக உள்ளது. அதனை இந்திய ராணுவம் இணைந்து அடிக்கடி முறியடித்துக் கொண்டுதான் உள்ளது.

அதே நேரத்தில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜெய்ஸ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், காஷ்மீரில் மக்களோடு மக்களாக கலந்து அவ்வபோது திடீர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு, பாகிஸ்தான் நிதி உதவி அளித்து வருகிறது.

இந்நிலையில், புல்வாமா மற்றும் புட்காம் மாவட்டங்களில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் நைரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் ஆய்வு மேற்கொண்ட போது திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு ராணுவம் குவிக்கப்பட்டு அவர்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

இதே போன்று, புட்காம் மாவட்டத்தில் சரார்-ஐ-சரீஃப் பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 12 மணி நேரமாக துப்பாக்கிச் சண்டையும், தேடுதல் வேட்டையும் நீடித்ததால், காஷ்மீரில் பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்தனர்.

இரண்டு தாக்குதலிலும் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. அவர்கள் ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், ஐந்து பேரில் ஒருவர் முக்கிய கமாண்டர் என்றும் ராணுவம் கண்டுபிடித்துள்ளது.

Previous articleஒரே மாதத்தில் ஏழாவது ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா! அச்சத்தில் அண்டை நாடுகள்!
Next articleமத்திய பட்ஜெட்டின் வரலாறு!