மத்திய பட்ஜெட்டின் வரலாறு!

0
134

ஆளுநர் உரையுடன் நாடாளுமன்றம் இன்று கூடவிருக்கிறது மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட இருக்கின்ற சூழ்நிலையில், அது தொடர்பான வரலாற்று தகவல்கள் சிலவற்றை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

நாட்டில் கடந்த 1860 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 7ம் தேதி தான் முதன்முதலாக பட்ஜெட் அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போதைய கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ஸ்காட்லாந்து பொருளாதார நிபுணரும், அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சன் இதனை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் சமர்ப்பணம் செய்தார்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது பட்ஜெட்டை கடந்த 1947ம் வருடம் நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அப்போதைய நிதி அமைச்சர் ஆர் கே சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார். மிக நீண்ட உரையை ஆற்றியவர் நிர்மலா சீதாராமன் ஆவார். கடந்த 2020 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது 2 மணி நேரம் 42 நிமிடம் இவர் உரையாற்றியிருக்கிறார்.

ஆனாலும் இன்னும் 2 பக்கங்கள் இருந்த சமயத்தில் அவர் சோர்வடைந்ததன் காரணமாக, அந்த பக்கங்களை படித்ததாக கருதுமாறு சபாநாயகரை கேட்டுக்கொண்டார். இதற்கு முந்தைய வருடத்தில் 2 மணி நேரம் 17 நிமிடம் பேசி படைத்த சாதனையை அவரே முறியடித்திருக்கிறார்.

வார்த்தைகளின் அடிப்படையில் பார்த்தால் 1991ம் வருடம் மன்மோகன் சிங் ஆற்றிய உரை 18650 வார்த்தைகளுடன் மிக நீண்ட உரையாக இருந்தது. 2018 ஆம் வருடம் அருண்ஜெட்லி ஆற்றியது 18104 வார்த்தைகளுடன் 2வது நீண்ட உரையாகும். 1970 ஆம் வருடம் ரூபா முஜி பாய் ஆற்றிய பட்ஜெட் உரை வெறும் 800 வார்த்தைகளுடன் மிக குறுகிய உரை என்று சொல்லப்படுகிறது.

கடந்த 1999ஆம் வருடம் வரை இங்கிலாந்து வழக்கப்படி பிப்ரவரி மாத இறுதியில் வேலை நாளில் மாலை 5 மணி அளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. அந்த வருடம்தான் காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை யஸ்வந்த் சின்கா கொண்டுவந்தார். பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யும் முறை கடந்த 2017ஆம் வருடம் அறிமுகம் செய்யப்பட்டது.

கடந்த 1955 ஆம் வருடம் வரையில் ஆங்கிலத்தில் மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது, காங்கிரஸ் அரசு இந்தியிலும் பட்ஜெட்டை அச்சடிக்க ஆரம்பித்தது. நோய்த்தொற்று காரணமாக, கடந்த வருடம் காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்திராகாந்திக்குப் பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த 2வது பெண் நிர்மலா சீதாராமன் ஆவார் என்று சொல்லப்படுகிறது. 92 வருடங்களாக தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த ரயில்வே பட்ஜெட் 2017 வருடத்திலிருந்து மத்திய பட்ஜெட்டுடன் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

சென்ற 1950ஆம் வருடம் வரையில் ஜனாதிபதி மாளிகையில் பட்ஜெட் அச்சடிக்கப்பட்டு வந்தது, அப்போது பட்ஜெட் கசிந்ததன் காரணமாக, டெல்லி மின்டோ சாலையில் இருக்கும் அச்சகத்துக்கு இந்த பணி மாற்றப்பட்டது. 1980 ஆம் வருடம் மத்திய நிதியமைச்சகம் அமைந்துள்ள வடக்கு பிளாக் கட்டிடத்தில் அரசு அச்சகம் தொடங்கப்பட்டது.

இந்திராகாந்தி அரசில் தாக்கல் செய்யப்பட்ட கடந்த 1973 மற்றும் 1974 உள்ளிட்ட வருடத்திற்கான பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை 550 கோடியாக இருந்ததன் காரணமாக, அது கருப்பு பட்ஜெட் என அழைக்கப்பட்டது. 1996-ஆம் வருடம் மன்மோகன்சிங் தாக்கல் செய்தது சகாப்தம் பட்ஜெட் என்றழைக்கப்பட்டது.

பா சிதம்பரம் தாக்கல் செய்த 1997 மற்றும் 1998 உள்ளிட்ட ஆண்டுக்கான பட்ஜெட் வசூலை அதிகரிக்க வரி குறைப்பு செய்யப்பட்டதால் அது கனவு பட்ஜெட் என்றழைக்கப்பட்டது. புத்தாயிரம் பிறந்த 2000வது வருடத்தில் யஷ்வந்த் சின்கா தாக்கல் செய்த பட்ஜெட் மில்லினியம் பட்ஜெட் என்று அழைக்கப்பட்டது.

யஷ்வந்த் சின்ஹா தாக்கல்செய்த 2002 மற்றும் 2003 உள்ளிட்ட ஆண்டின் பட்ஜெட்டில் பல வாபஸ் அறிவிப்புகள் வெளியிடப்பட்டதால் அது ரோல் பேக் பட்ஜெட் என்றழைக்கப்பட்டது. கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் அதை 100 ஆண்டுகளில் இல்லாத பட்ஜெட் என்று வர்ணித்திருந்தார்.

Previous articleஒரே இரவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! காஷ்மீரில் தூங்காத மக்கள்!
Next articleகட்சிக்காக நான் பெற்ற பிள்ளையையே விட்டுக்கொடுத்திருக்கிறேன்! பி.டி.ஆர் பரபரப்பு பேச்சு!