கட்சிக்காக நான் பெற்ற பிள்ளையையே விட்டுக்கொடுத்திருக்கிறேன்! பி.டி.ஆர் பரபரப்பு பேச்சு!

0
118

திருப்பரங்குன்றத்தை அடுத்திருக்கின்ற பசுமை தியாகராஜர் காலனியில் இருக்கின்ற கோபால்சாமி திருமண மண்டபத்தில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தளபதி சட்டசபை உறுப்பினர் தலைமை தாங்கினார், கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிதியமைச்சர் பி.டி . ஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது, திமுகவைப் பொறுத்தவரையில் கொள்கை ரீதியாக ஒவ்வொரு பொறுப்புக்கும் 8 முதல் 10 பேர் வரையில் தங்களுடைய விருப்ப மனுவை கொடுத்திருக்கிறீர்கள் எல்லோருக்கும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், ஒருவருக்குத் தான் வாய்ப்பு வழங்க முடியும் என கூறியிருக்கிறார்.

திமுகவில் இனிவரும் காலங்களில் ஒரு நபரோ ,அல்லது ஒரு குடும்பம் என்று அனைத்து பொறுப்புகளையும் வைத்திருக்க இயலாது. நான் பெற்ற பிள்ளையாக நினைத்த தகவல் தொழில்நுட்பத் துறையை விட்டு கொடுத்திருக்கிறேன் அதனை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு மற்றவர்களும் பின்பற்றவேண்டும் குறிப்பாக எல்லோருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார் நிதியமைச்சர்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படாதவர்கள் கவலைப்பட வேண்டாம் மற்றொரு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும், என்னுடைய தந்தையை போலவே மதுரை வளர்ச்சிக்கு என்னுடைய அமைச்சர் பதவியை நான் பயன்படுத்துவேன்.

சட்டசபை உறுப்பினர் தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல் மூலமாக மக்களுக்கு அடிப்படை வசதி உள்ளிட்டவற்றை நிர்ணயம் செய்ய இயலும். கட்சி மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற தேர்தலில் பாடுபட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

நாம் வெற்றி பெற்றால்தான் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் நாம் செயல்படுத்துவதற்கான பெயர் கிடைக்கும் அவ்வாறு இல்லையென்றால் நம்முடைய திட்டங்கள், செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை வேறு ஒருவர் வாங்கி செல்ல நேரலாம்.

ஆகவே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தவர்கள், கிடைக்காதவர்கள் என்று எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அனைத்து நபர்களும் தேர்தலில் முழுவீச்சில் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.