நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!
கொரோனா தொற்றானது தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. இன்றுவரை தடுப்பூசி நடைமுறை படுத்தப்பட்டும் தொற்று பரவுவது முடிவுறவில்லை.நாள்தோறும் தொற்றானது புதிய பரிமாற்றத்தை எடுத்து கொண்டே வருகிறது.அந்தவகையில் செல்வாக்கு வாய்ந்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை பாரபட்சமின்றி இந்த தொற்றானது அனைவரையும் தாக்கி வருகிறது. அந்த வகையில் அதிக அளவு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் ஆகியோர் அடுத்தடுத்த பாதிப்படைந்து வருகின்றனர்.
குறிப்பாக இந்த மூன்றாவது அலையில் அதிக சினிமா பிரபலங்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர், இந்த மூன்றாவது அலையானது சினிமா பிரபலங்களை குறி வைத்து தாக்கி வருகிறது எனவும் கூறுகின்றனர்.அந்த வகையில் வைகைப்புயல் வடிவேலு, உலக நாயகன் கமல்ஹாசன்,கீர்த்தி சுரேஷ், அருண்விஜய் போன்றோருக்கு தொடர்ந்து கொரோனா பாதிப்பானது உறுதியாகி வந்தது. அந்த வரிசையில் தற்போது ரஜினி மகளான ஐஸ்வர்யா தனுஷ்-க்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
இவ்வாறு தொற்றானது நாளடைவில் சினிமா துறையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் திரை உலகம் சற்று கதிகலங்கியே காணப்படுகிறது.அதேபோல தினந்தோறும் ஓர் திரையுலக பிரபலத்திற்கு தொற்று உறுதியாகி வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தற்பொழுது நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது. மேலும் இது குறித்து சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, எனக்கு இரு நாட்களாக கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்து வந்தது. பின்பு கொரோனா பரிசோதனை செய்தலில் முடிவு பாசிட்டிவாக வந்தது. அதனால் நான் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். மேலும் சமீபகாலத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுள்ளார்.