179 கர்ப்பிணிகள் உயிரிழப்பு தமிழகத்தை அதிரவைக்கும் உண்மை

0
139
Representative image

தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 179 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீன நாட்டில் உருவாகிய கொரோனவைரஸ் மற்ற நாடுகளுக்கு பரவி ஒட்டு மொத்த உலகையே முடக்கிப்போட்டது.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் முழு ஊரடங்கு போடப்பட்டது.

கொரோனாவைரஸின் தாக்கம் முதலில் எதிர்பாராத விதமாக தாக்கி நிலைகுலைய செய்தாலும், அதன்பின்பு மத்திய அரசும், மாநில அரசுகளும், மருத்துவர்களும் ஒன்றிணைந்து கொரோனாவை ஓரளவுக்கு சமாளித்து வந்தனர்.

ஆனால் இரண்டாம் அலை மீண்டும் நாட்டையே உலுக்கி எடுத்து போனது, எண்ணிலடங்கா உயிரிழப்பு ஏற்பட்டது.

கொரோனாவை சமாளிப்பதில் மிகப்பெரிய சவாலாக இருந்தது, கர்ப்பிணி பெண்கள் தான். ஊரடங்கு காலங்களில் வழக்கமாக எடுக்கும் ஸ்கேன் கூட இல்லமால் தான் மகப்பேறுக்கு நடந்தது. இது மகப்பேறுவியலில் மிகப்பெரிய சவாலாக இருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழக சுகாதாரதுறை கொரோன பாதித்து உயிரிழந்த கர்ப்பிணிகளின் எண்ணிக்கையை எடுத்தது.

அந்த எண்ணிக்கையில் கடந்த 2021ம் ஆண்டு கொரோனா உச்ச வரம்பில் இருந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில், மொத்தம் 179 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றால் உயிரிழந்து இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக, மே மாதத்தில் மட்டும் 111 கர்ப்பிணிகளும், ஜூலை மாதத்தில் 37 கர்ப்பிணிகளும் மாநிலம் முழுதும் உயிரிழந்துள்ளனர்.

Previous articleகர்ப்பிணியாக நடித்த மனைவி, விபரீதத்தில் முடிந்த நாடகம்.
Next articleதமிழக அரசு விதித்த திடீர் தடை! அதிர்ச்சியில் மக்கள்!