வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக்கொண்ட நபர்! 1 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்!

Photo of author

By Sakthi

கேரள உயர்நீதிமன்றத்தில் நோய் தொற்று தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இருப்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும், அதனை அகற்ற வேண்டும் எனவும், பீட்டர் மையாலி பெரம்பில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது, அற்பமானது, என்று தெரிவித்திருக்கிறார்கள். விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

அதோடு மனுதாரருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது இந்த உத்தரவை எதிர்த்து 2 நீதிபதிகள் கொண்ட அமர்வின் பீட்டர் பெரம்பில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் மணிக்குமார், நீதிபதி ஷாஜி விசாலி, உள்ளிட்டோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் நோய்த்தொற்று தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது வாக்காளர்களை கவரும் நோக்கத்திற்காக தான் என்ற மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்க முடியாது. தடுப்பூசி சான்றிதழை தனிநபர்கள் பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது நீதிமன்றம்.

இதன் காரணமாக மிகப் பெரிய விளம்பரம் கிடைத்துவிடாது, பிரதமரின் புகைப்படமும், அதிலிருக்கின்ற வாசகங்களும், மக்களை கவர்வதற்காகவும், தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்கப்படுத்தவும் இடம்பெற்று வருகிறது.

இதில் அடிப்படை உரிமை மீறல் எதுவுமில்லை அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் வழங்கப்பட்டது என்ற உரிமைகளை இவ்வளவு எளிதாக கருத இயலாது என தெரிவித்திருக்கிறார்கள்.

ஒரு சான்றிதழில் பிரதமரின் புகைப்படம் இடம்பெறுவதை கூட பொறுத்துக் கொள்ள இயலாத அளவிற்கு சகிப்புத்தன்மை இல்லாதவர்களாக குடிமக்கள் இருக்கக்கூடாது. ஆகவே இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்கள். இதனையடுத்து மனுதாரருக்கு விதிக்கப்பட்ட 1 லட்சம் அபராதம் 25000மாக குறைக்கப்படுகிறது. என்றும் நீதிபதிகள் அந்த உத்தரவில் தெரிவித்திருக்கிறார்கள்.