உக்ரைன் மீது ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் திட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யா,உக்ரைனை எந்த நேரத்திலும் ஆக்கிரமிக்க கூடும் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் அதிக மனித உயிரிழப்பு ஏற்படும் என்று கூறியிருக்கிறார்.
மேலும்,அவர் தெரிவித்ததாவது, ஆனாலும் எங்கள் தயாரிப்புகள் மற்றும் எங்களுடைய பதிலின் அடிப்படையில் ரஷ்யாவிற்கும், அதிக ராணுவ இழப்பு உண்டாகுமென்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என கூறியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் தலைநகர் கெய்வை மிக விரிவாக கைப்பற்றுவதற்கு ரஷ்யா முயற்சி செய்யும்போது 50000 பேர் வரையில் உயிரிழக்கக் கூடும் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார்.
அதாவது இதன் மூலம் ரஷ்யாவிற்கு அமெரிக்கா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது என்றே கருதப்படுகிறது.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் இந்த விவகாரம் தொடர்பான வாக்களிப்பை இந்தியா புறக்கணித்திருக்கிறது இதன் மூலம் இந்தியா தன்னுடைய அணிசேரா கொள்ககையை நிரூபித்திருக்கிறது.