சுனாமியில் மீட்கப்பட்ட பெண் குழந்தைக்கு சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் திருமணம்! நெகிழ்ந்த நாகை மக்கள்!

0
59

கடந்த 2004ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட சுனாமி பேரலையில் அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட இயலாது அப்படி ஒரு மிகப்பெரிய துயர சம்பவமாக அது நடைபெற்றது.

கடந்த 2004ஆம் வருடம் டிசம்பர் மாதம் 26ம் தேதி இந்தியாவில் இருக்கக்கூடிய கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பம் காரணமாக, மாபெரும் சுனாமி என்ற ஆழிப்பேரலை ஏற்பட்டு அதன் மூலமாக கோடிக்கணக்கான உயிர்கள் பலியாகினர். பல வீடுகள் சேதமடைந்தன. குழந்தைகளையும், பல குழந்தைகள் தாய் தந்தை இருவரையும் இழந்து தவித்து வந்தார்கள்.

18 வருட காலம் உருண்டோடிய பின்னரும் கூட அந்த துயர சம்பவம் இன்னும் அந்தப் பகுதி மக்களின் மனதில் உருண்டோடிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரவில்லை என்பதே நிதர்சனம்.

அந்த விதத்தில் சுனாமி ஆழிப்பேரலையில் இருந்து மீட்கப்பட்டு அரசால் ஆரம்பிக்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் வளர்ந்த 9 மாத குழந்தை சவுமியா மற்றும் 3 மாத குழந்தை மீனா உள்ளிட்ட இருவரையும் அப்போது நாகை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த தற்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்து வந்தார் என்று சொல்லப்படுகிறது.

அவர் சென்னைக்கு பணி மாறுதல் காரணமாக, சென்றிருந்தாலும் மாதம்தோறும் நாகை மாவட்டத்திற்கு வந்து குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு அவர்களுடைய கல்வி மற்றும் வளர்ச்சியில் ராதாகிருஷ்ணன் தன்னுடைய பங்களிப்பை செலுத்தி வந்தார் என்று சொல்லப்படுகிறது. இதன்காரணமாக, இப்போதும் அங்கிருக்கின்ற மக்களின் நன்மதிப்பை அவர் பெற்றிருந்தார் என்றால் மிகையாகாது.

இந்த சூழ்நிலையில் குழந்தைகளாக இருந்த சௌமியா மற்றும் மீனா ஆகிய இருவரும் தற்சமயம் 18 வயதை கடந்த நிலையில், திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. தத்தெடுத்து வளர்த்து வந்த நாகையை சேர்ந்த மலர்விழி, மணிவண்ணன், தம்பதியர் திருமண ஏற்பாடுகளை செய்தார்கள்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சௌமியாவிற்கு திருமணம் நடந்தது. இதில் நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ், காவல் கண்காணிப்பாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள் இந்த திருமணம் அங்கிருந்தவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.