அம்பத்தூர் காந்தி நகர் தாலுகா அலுவலகம் பின்புறம் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகின்றது. இங்கே வடமாநிலத்தை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் தங்கியிருக்கிறார்கள். இங்கே தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இவர்களில் ஒடிசா மாநிலத்தை சார்ந்த கிஷோர் என்பவர் மனைவி புத்தினி மற்றும் ஆகாஷ் பிரகாஷ் துர்கி உள்ளிட்ட நான்கு குழந்தைகளுடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள்..
இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் கிஷோர் தங்கியிருந்த குடிசை வீட்டில் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. அதன்பிறகு அந்தக் குழந்தை திடீரென்று காணாமல் போய்விட்டது.
இதற்குப் பின்னர் கிஷோர் கட்டிட பொறியாளர் முருகானந்தத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருகை தந்தார். பின்னர் கிஷோர், முருகானந்தம், உள்ளிட்டோர் குடியிருப்பை சுற்றி தேடிப் பார்த்தார்கள். இருந்தாலும் குழந்தையை பற்றி எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.
.
இதுதொடர்பாக கிஷோர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார், காவல்துறை ஆய்வாளர் ராமசாமி தலைமையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள் அதோடு காவல்துறையினர் குழந்தையை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகப்படுகிறார்கள்.
மேலும் காவல்துறையினர் அந்த பகுதியில் இருக்கின்ற கண்காணிப்பு கேமரா மூலமாக ஆராய்ந்து குழந்தையை தனிப்படையமைத்து தேடி வருகிறார்கள். ஒன்றரை வயது குழந்தை மாயமான சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.