ஒமைக்ரான் எதிரொலி! சீனாவில் இதற்கு தடை அவதியில் மக்கள்!

0
152

உலக நாடுகளுக்கு நோய்த் தொற்று பரவ முக்கிய காரணமாக, இருந்த சீனா நோய்த்தொற்று விவகாரத்தில் சகிப்புத் தன்மையே அற்ற ஒரு நிலையைக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக குளிர் கால ஒலிம்பிக் போட்டியின் காரணமாக, சீனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில், சீனாவின் தெற்குப் பகுதியில் இருக்கின்ற செய்ஸ் நகரில் சென்ற சனிக்கிழமை முதல் திடீரென்று நோய் தொற்று பரவல் அதிகமாக பரவ தொடங்கியது. புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் தாக்கம் காரணமாக, அங்கே நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

14 லட்சம் பேர் வசிக்கும் அந்த நகரில் நேற்றைய நிலவரத்தின் அடிப்படையில் 135 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அவர்களில் 2 பேருக்கு புதிய வகை நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நகரில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதோடு அத்தியாவசியமற்ற அனைத்து கடைகளையும் மூடவும், சாலைகளில் வாகனங்களில் செல்லவும், தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleஅரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த குடிமக்கள்! கனடாவில் பரபரப்பு!
Next articleபஞ்சாப் மாநிலத்தில் இதுதான் எங்களுடைய முதல் குறிக்கோள்! பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம்!