பஞ்சாப் மாநிலத்தில் இதுதான் எங்களுடைய முதல் குறிக்கோள்! பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம்!

0
57

177 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் மாதம் 10ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியிடப்படவிருக்கிறது.

ஏற்கனவே இந்தியாவைப் பொறுத்தவரையில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது .

இன்னமும் சொல்லப்போனால் தமிழகம், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களைத் தவிர்த்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாஜக கூட்டணியோ அல்லது தனித்தோ ஏதாவதொரு முறையில் ஆட்சியை தன்வசம் வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் கட்சி தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதே சமயம் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆம் ஆத்மி, பாஜக, உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரிக்கும் விதமாக பிரதமர் நரேந்திரமோடி காணொளி காட்சி மூலம் பிரசாரம் செய்து வருகிறார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, புதிய பஞ்சாப்பை உருவாக்குவது தான் எங்களுடைய குறிக்கோள், எங்களிடம் தொலைநோக்குப் பார்வையும், பணியின் சாதனையும், இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் எல்லைப்பகுதி மேம்பாட்டு ஆணையத்தை ஏற்படுத்துவோம். கர்தார்பூர் சாகிப்பை காங்கிரஸ் கட்சியால் இந்தியாவில் வைத்திருக்க இயலவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஆட்சியில் நீடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக ஒரு சிலர் பஞ்சாப் மாநிலத்தை தீவிரவாத தீயில் எரிய வைக்கிறார்கள். இந்தியாவை முன்னோக்கி வைத்திருப்பது பஞ்சாபின் அடையாளம். சீக்கியர்களுக்கு துணை நிற்கும் அரசாக பாஜக எப்போதுமிருக்கும். மிக விரைவில் நான் பஞ்சாப் செல்லவிருக்கிறேன். பஞ்சாப் மாநில மக்களை சந்திக்க இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.