எடின்பர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரை சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்துள்ளதாக ஆய்வின் மூலமாக வெளிவந்திருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் பாராசிட்டமால் மாத்திரை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு பாராசிட்டமால் மாத்திரை வழங்கி பரிசோதனை செய்ததில் ரத்த அழுத்தம் குறைந்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை வருவதற்கான அபாயம் அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
நோய்த்தொற்றின் 3 அலைகளிலும் அதிகமாக விற்பனையான மாத்திரைகளில் பாராசிட்டமால் முதலிடத்தில் இருந்தது. இந்த சூழ்நிலையில், எல்லோரும் பாராசிட்டமால் எடுத்துக் கொள்வது உகந்ததல்ல என்ற தகவல் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கிறது.