மாணவர்கள் யாரும் இதை செய்ய வேண்டாம்! அறிவுறுத்தும் அரசு!!

0
88

மாணவர்கள் யாரும் இதை செய்ய வேண்டாம்! அறிவுறுத்தும் அரசு!!

கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குல்லா, ஹிஜாப், பர்தா போன்றவை அணிந்து வர சில கல்லூரிகளில் தடை விதிக்கப்பட்டது.

இதனை ஏற்க மறுத்த மாணவிகள் ஹிஜாப் அணிந்தே கல்லூரிக்கு வந்தனர். இதனிடையே இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்து மாணவர்கள் காவித்துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதையடுத்து, பர்தா மற்றும் காவித்துண்டு அணிந்து வந்த மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் சிவமொக்கா, பாகல்கொட்டை, தாவண்கரே உள்ளிட்ட பகுதிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதை எதிர்த்து நேற்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி பசவராஜ் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-

மாணவிகள் பர்தா அணிந்து வருவது தொடர்பான விவகாரம் தற்போது, உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவு எதுவாக இருப்பினும், அதை ஏற்க அரசு தயாரகா உள்ளது. எனவே மாணவர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் மாணவர்கள் யாருடைய தூண்டுதலுக்கும் உள்ளாகாமல் இருக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தேவையின்றி யாரும் செயல்பட வேண்டாம்.

பர்தா அணிவது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் இன்னும் ஒருசில நாட்களில் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்நிலையில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பதற்றமான நிலையில் உள்ள கல்லூரிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

author avatar
Parthipan K