தொடர் வெடிகுண்டு மிரட்டலால் அதிர்ந்து போன வாஷிங்டன்! அமெரிக்காவில் பரபரப்பு!

0
129

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் நேற்று முன்தினம் ஒரே நாளில் தொடர்ந்து வந்து கொண்டே இருந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, அதிர்ந்து போனது அந்த நகர் அந்த நகரில் டிசிபிஎஸ் மற்றும் டி சி சார்ட்டர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

தகவல் அறிந்தவுடன் வாஷிங்டன் நகர காவல் துறையினர் அந்த பள்ளிக்கூடங்களுக்கு நுழைந்தார்கள். அந்த பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், உள்ளிட்ட அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டார்கள்.

இதனை தொடர்ந்து அங்கே அங்குலம், அங்குலமாக, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இருந்தாலும் வெடிகுண்டு, மற்ற வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. பள்ளிக்கூடத்திற்கு கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்கனவே வெட்டுண்டு மிரட்டல் வந்தது. அந்த சமயத்தில் அங்கு நடைபெறவிருந்த ஒரு நிகழ்ச்சிக்கு துணை ஜனாதிபதி கமலாஹாரிஸின் கணவர் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, அவரும், அங்கிருந்த மற்றவர்களும், பத்திரமாக வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்த சூழ்நிலையில், அந்த பள்ளிக்கு மீண்டும் நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.

ஆகவே ஒரு வாரத்தில் 2வது முறையாக அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக வாஷிங்டன் மாநகர காவல் துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில், வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து 6 சிறுவர்கள் உள்ளிட்டோரை எஃப்.பி.ஐ. அடையாளம் கண்டிருக்கிறது. அந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் இனரீதியாக அல்லது இனரீதியாக தூண்டப்பட்ட தீவிரவாதமாகவும் வெறுப்பு குற்றங்களாக விசாரிக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சந்தேகிக்கப்படும் அந்த 6 சிறுவர்களுக்கும் மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டிருக்கின்ற வாஷிங்டனை சேர்ந்த 16 வயது இளைஞருக்கும், தொடர்பிருக்கிறதா என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக கூறப்பட்டிருக்கிறது.

Previous articleஉச்சநீதி மன்றத்தையே கதறவிட்ட விஜய் மல்லையா!
Next articleசிறையிலிருந்து தப்பிய குற்றவாளிகள்! லாரி விபத்தில் பரிதாப பலி!