அடடே இந்திய மண்ணின் மீது அவ்வளவு பாசமா? மகளுக்கு இந்திய கிரிக்கெட் மைதானத்தின் பெயரை வைத்த வெளிநாட்டு வீரர்!

0
172

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் கார்லஸ் ப்ரேத்வைட் தன்னுடைய மகளுக்கு இந்திய கிரிக்கெட் மைதானத்தின் பெயரை சூட்டியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

ப்ராத்வைட் ,ஜெசிகா பெலிக்ஸ், தம்பதிக்கு பெண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஈடன் ரோஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயர் வைத்தது பின்னணியில் இந்திய தொடர்பு ஒன்று இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கடந்த 2016ஆம் வருடம் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடந்தது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது.

வெற்றி பெறுவதற்கு 156 ரன்களை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணியில் மார்லன் சாமுவேல்ஸ், டுவைன் பிராவோ, தவிர மற்ற முன்னணி வீரர்கள் எல்லோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்.

அணியை மீட்டெடுக்க சாமுவேல்ஸ் 85 ரன்கள் எடுத்து தன்னந்தனியாக போராடி வெற்றி அருகில் கொண்டு சென்றாலும் அன்றைய தினம் வெற்றிக்கு உதவியது ப்ராத்வைட்டின் 4 இமாலய சிக்சர் தான் என்று சொல்லப்படுகிறது.

கடைசி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு 19 ரன்கள் தேவைப்பட்ட சூழ்நிலையில், முதல் 4 பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார் மைதானத்தில் வாண வேடிக்கையாக அமைந்த அந்த 4 சிக்சர்கள் உதவியின் காரணமாக, மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது.

அதன் பிறகு பிராத் வைட் பெயர் உச்சரிக்கபட்டாலே அந்த 4 சிக்ஸர்களை தான் கிரிக்கெட் ரசிகர்கள் நினைவு படுத்துவார்கள். அந்த சரித்திர வெற்றியை நினைவுகூறும் விதமாக தான் தன்னுடைய மகளுக்கு ஈடன் ரோஸ் என்று அவர் பெயர் வைத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

குழந்தையின் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ஈடன் ரோஸ் ப்ராத்வைட் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

Previous articleஎன்னது 4-வது தவணை தடுப்பூசியா? மருத்துவ நிபுணர்கள் தகவல்!
Next articleபருவம் தவறிய கனமழையால் அறுவடை பணிகள் பாதிப்பு! டெல்டா மாவட்ட மக்கள் வேதனை!