தமிழகத்தில் இந்த பகுதிகளில் இருந்த 3,621 கடைகள் மூடப்பட்டன! காரணம் இதுதான்!!

0
119

தமிழகத்தில் இந்த பகுதிகளில் இருந்த 3,621 கடைகள் மூடப்பட்டன! காரணம் இதுதான்!!

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நாளை (பிப்ரவரி 19-ந் தேதி) ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28-ந் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 4-ம் தேதி நிறைவடைந்தது.

இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று (பிப்ரவரி 17-ந் தேதி) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க ஏதுவாக வாக்குபதிவு நடைபெறும் நாளில் (பிப்ரவரி 19-ந் தேதி) பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அதனை தொடர்ந்து கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் பகுதிகள் மற்றும் அந்த பகுதிகளுக்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்களை பிப்ரவரி 17-ந் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 20-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட உத்தரவிடப்பட்டது.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள வருகிற 22ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள் மற்றும் அந்த பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் பகுதிகளில் உள்ள மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில், தேர்தல் நடிபெற உள்ள பகுதிகளில் இருந்த 3,621 மது கடைகள் மூடப்பட்டுள்ளன.  நாளை வரை இந்த கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

Previous articleஜூலை 1ஆம் தேதி முதல் இந்த பொருட்களுக்கு தடை! தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளுக்கு சீல்!!
Next articleமீண்டும் இந்த வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து! கல்வித்துறை வெளியிட்ட தகவல்!