ஐ.பி.எல் ஏலத்தில் மாற்றி யோசித்த அணி நிர்வாகம்! கடுப்பான பயிசியாளர் ராஜினாமா!!
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இந்த முறை ஐ.பி.எல் தொடரில் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ளன.
இந்த மெகா ஏலத்தில் பங்கேற்க சுமார் 1000க்கும் மேற்பட்ட வீரர்களை பதிவு செய்திருந்த நிலையில், அதிலிருந்து 600 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க தகுதியானவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மெகா ஏலத்தில் ஏலம் விடப்பட்டனர். இந்த மெகா ஏலத்தில் ஏலம் விடப்பட்ட 600 வீரர்களில் 67 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தமாக 204 பேர் விற்கப்பட்டனர்.
ஐதராபாத் அணி இந்த முறை மெகா ஏலத்தில் பெரியளவில் சிறப்பான வீரர்களை தேர்வு செய்யவில்லை என்ற விமர்சனங்கள் இருந்து வருகிறது. அந்த அணி அனுபவம் குறைந்த வீரர்களை அதிக தொகை கொடுத்து வாங்கி சொதப்பியுள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
இந்த நிலையில், அந்த அணியின் துணைப்பயிற்சியாளராக இருக்கும் சைமன் கடிச் அவர்கள் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை எடுக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டம் போட்டிருந்தோம். ஆனால் அணி நிர்வாகம் அதனை சற்றும் செயல்படுத்தாமல் வேறு ஏதேதோ வீரர்களை அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். இப்படிபட்ட அணியுடன் இனியும் பயணிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.