மின்னிணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக அரசு மின் வாரியம் ஒப்புதல் கேட்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று சுமார் 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு அந்த கட்டணத்தை செலுத்த வேண்டிய அவசியமில்லை என்ற முறை தொடர்ந்து வருகிறது இலவச மின்சாரத்திற்காக ஒரு வருடத்திற்கு 3,500 கோடி ரூபாயை மின்சார வாரியத்திற்கு தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஒரே நபர் 2 அல்லது 3 மின் இணைப்புகள் மூலமாக மானியம் பெற்று பயன் அடைந்ததாக மின்வாரியத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தனர். இன்று சூழ்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலமாக முறைகேடுகளை கண்டறிய முடியும் என்று முடிவெடுத்து இருக்கக்கூடிய மின்வாரியம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தவுடன் தமிழக அரசு கொள்கை முடிவை அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.