திருமணத்திற்கு விருந்தினராக வந்த பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்! திருமண வீட்டில் பரபரப்பு!

0
92

சினிமாவில் வருவது போன்ற காட்சியை நிஜ வாழ்க்கையிலும் நடக்கிறது இதற்க்கு காரணம் தற்போது இருக்கும் இளைஞர்களின் முதிர்ச்சியற்ற குணம்தான் என்று தெரிவிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் தான் வாழ்க்கை என்று அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இதன் காரணமாக, ஏதாவது கவனம் ஈர்க்கும் விதத்தில் செய்ய வேண்டும் என்பது இந்த காலத்து இளைஞர்களுக்கு இயல்பாகவே ஆர்வமாக இருந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் திருமண நிகழ்வு ஒன்றில் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில் இளைஞர் ஒருவர் திருமணத்திற்கு வந்திருந்த பெண் ஒருவருக்கு பின்பக்கமாக இருந்து தாலி கட்டுகிறார். திருமணத்திற்கு கெட்டி மேளம் அடிக்க அதனை பயன்படுத்திக் கொண்டு இவர் தாலி கட்டி விட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தன தாலி கட்டியபோது அந்தப் பெண்ணுக்கு தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் நிறையவே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக, அவர் தெரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தாரா? என்று இணையதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.